தொழிலாளர்களுக்கான 4 விதிகள் அடுத்த 2022-23 ஆம் நிதியாண்டில் அமலுக்கு வரும் எனத் தகவல்

0 2415

தொழிலாளர்களுக்கான 4 விதிகளும் அடுத்த 2022-23 ஆம் நிதியாண்டில் அமலுக்கு வரும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர்.

அவர் மேலும் கூறுகையில், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியம், சமூகப் பாதுகாப்பு, பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவை தொடர்பான 4 விதிகளை மத்திய அரசு வகுத்துள்ளது என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக இருந்த பல்வேறு விதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 4 விதிகளாக வகுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். தொழிலாளர்’ துறை அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், தொழிலாளர்கள் தொடர்பான விதிகள் அடங்கிய தீர்மானத்தை மாநில அரசுகளும் இயற்ற வேண்டியது அவசியமாக உள்ளது என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments