எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை குடோனில் தீ விபத்து

0 1812

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையின் குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர்.

நீம்ரானா  பகுதியில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலையின் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விண்ணை முட்டும் அளவுக்கு புகையுடன் தீ வெளியேறியது.

தகவல் அறிந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்து எப்படி நேர்ந்தது என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments