மதமாற்ற தடை சட்டத்திற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

0 3734

மதமாற்ற தடை மசோதாவிற்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

கர்நாடக மத உரிமை மற்றும் பாதுகாப்புச் சட்டம் 2021 என்ற பெயரில் மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி, சலுகைகள், இலவச பரிசுகள் என ஆசைக் காட்டி ஒருவரை மதம் மாற்றம் செய்ய மசோதா தடை விதிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் கட்டாய மத மாற்றம் மூலம் நடைபெறும் திருமணங்களை செல்லாது என்று அறிவிக்க மசோதா வழிவகை செய்வதாகவும், மதமாற்ற முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 10 லட்சம் வரை அபராதம் விதிக்கவும், 3 முதல் 10 அண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் மசோதா வகை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெலகாவியில் நடந்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் மடாதிபதிகள் மாநாட்டில் பேசிய முதலமைசர் பசவராஜ் பொம்மை, மக்களின் ஏழ்மை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நடத்தப்படும் ரகசிய மதமாற்றத்தை தடுக்க தடைச் சட்டம் நிச்சயம் கொண்டு வரப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments