கணவனை பிரிந்த மன்மத நர்சு கொலை… அந்த 150 பேர் அதிர்ச்சி... செல்போன் தொடர்பால் மொத்தமாக சிக்கினர்

0 10253
கணவனை பிரிந்த மன்மத நர்சு கொலை… அந்த 150 பேர் அதிர்ச்சி... செல்போன் தொடர்பால் மொத்தமாக சிக்கினர்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கணவன் மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு தனியாக வசித்து வந்த நர்சு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது மொமைல் நண்பர்களான 150 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் , விசாரணைக்கு வந்து சென்ற ஆண் செவிலியர் ஒருவர் தான் கொலையாளி என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் செல்வி , 48 வயதான இவர் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு பாப்பம்மாள்புரத்தில் தனியாக வசித்து வந்த செல்வி, கடந்த நவம்பர் மாதம் 24ஆம் தேதி வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு சடலமாகக் கிடந்தார்.

இது தொடர்பாக காவல்துறையினர் செல்வியின் வீட்டில் சென்று ஆதாரங்களை சேகரித்த போது அங்கே 500க்கும் மேற்பட்ட உயர் ரக ஆணுறை பாக்கெட்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் கொலை செய்யப்படுவதற்கு முன்பு செல்வி யாருடனோ தவறான சேர்க்கையில் ஈடுபட்டதற்கான தடயங்களும் கிடைத்தது.

செல்வியின் செல்போனை ஆய்வு செய்ததில் செல்விக்கு பல்வேறு நபர்களுடன் தகாத தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செல்வியுடன் தொடர்பில் இருந்த மொபைல் நண்பர்கள் 150க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

இந்த பட்டியலில் அவருக்கு அறிமுகமான முக்கிய அரசியல் பிரமுகர்கள் , காவல்துறையினர், ஆண் செவிலியர்கள், மருத்துவர்கள் ,ஆட்டோ ஓட்டுநர்கள், கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அந்தவகையில் கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி கோடாங்கிபட்டியைச் சேர்ந்த கம்பம் அரசு மருத்துவமனை ஆண் செவிலியரான ராமச்சந்திரபிரபு என்பவரை அழைத்து விசாரணை நடத்தினர். அதற்கு அடுத்த நாள் 10 ஆம் தேதி ஊத்துக்காடு பகுதியில் ராமச்சந்திர பிரபு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் போலீசாருக்கு இராமச்சந்திரபிரபு மீது சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராமச்சந்திரபிரபுவும் செல்வியும் சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய போது தவறான தொடர்பில் இருந்ததாகவும், இருவரும் பணி மாறுதல் பெற்று வேறு வேறு இடங்களுக்கு சென்று விட்ட போதும் தங்களுக்கு இடையேயான காதல் விளையாட்டை தொடர்ந்து வந்துள்ளனர்.

செல்வியை தேடி அவரது வீட்டுக்கே வந்து செல்வதை ராமசந்திர பிரபு வாடிக்கையாக்கி உள்ளான். இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்ற கடந்த மாதம் 24ஆம் தேதி பிற்பகல் 1.45 மணியளவில் ராமச்சந்திரபிரபு செல்வியின் வீட்டிற்கு வந்து சென்றதாக சிசிடிவி காட்சிகளும் பதிவாகியுள்ளன.

கோடாங்கிபட்டியில் இருந்து ஆண்டிபட்டி வரை உள்ள பல்வேறு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அந்த நேரத்தில் ராமச்சந்திரபிரபு அங்கு நடமாடியதற்கான அனைத்து சிசிடிவி ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டது.

கொலை நடந்த அன்று மாலை 4 மணி அளவில் நர்ஸ் செல்வியின் மூன்று பவுன் தங்க செயினை பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ராமச்சந்திரபிரபு அடகு வைத்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

இதனையடுத்து நர்ஸ் செல்வியைக் கொலை செய்தது ராமச்சந்திரபிரபு தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவித்த போலீசார், ராமச்சந்திர பிரபுவின் மனைவியான ஈஸ்வரி என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது கணவருக்கு செல்வியுடன் தகாத உறவு இருந்ததை ஒப்புக் கொண்டதோடு, கணவரிடம், நர்ஸ் செல்வி பல லட்சம் ரூபாய் பணம் கடனாக பெற்றிருப்பதும் தெரிய வந்தது.

தற்கொலை செய்து கொண்ட ராமச்சந்திர பிரபு, மன்மத நர்சு செல்வியை போலவே மேலும் 8 பெண்களுடன் தொடர்பில் இருந்ததும் அவர்களுக்கும் அடிக்கடி தனது வங்கிக் கணக்கு மூலம் பணம் அனுப்பி வந்ததும் உறுதிப்படுத்தப்பட்டது.

நர்ஸ் செல்வி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தரையில் இருந்த அவரது ரத்தத்தில், ராமச்சந்திர பிரபுவின் கால் தடம் பதிந்து இருந்ததை தடய அறிவியல் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவித்த போலீசார் ,தன்னை காவல்துறையினர் கண்டுபிடித்து விட்டார்களே என்று பயந்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் ஒருவழியாக துப்பு துலங்கிய நிலையில் செல்வியை சந்திக்க போக்கும் வரத்துமாக இருந்த அந்த 150 குட்டிச்சேட்டை ரோமியோக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்...! ஆனால் அவர்களில் சிலரது வீடுகளில் விவரம் தெரிந்து விவகாரம் பூதகரமாகி உள்ளது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments