சாலை விபத்தில் உயிரிழந்த மாவட்ட ஆட்சியரின் மெய்க்காப்பாளர்.. வாயில்லா ஜீவன்கள் மீது அன்பு கொண்டிருந்த இளம் காவலர்..

0 3099
சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் மெய்க்காப்பாளராகப் பணியாற்றி வந்த இளம் காவலர் சாலை விபத்தில் பலியான நிலையில், வாயில்லா ஜீவன்களிடம் அவர் அன்பு காட்டிய வீடியோ வெளியாகி இருக்கிறது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் மெய்க்காப்பாளராகப் பணியாற்றி வந்த இளம் காவலர் சாலை விபத்தில் பலியான நிலையில், வாயில்லா ஜீவன்களிடம் அவர் அன்பு காட்டிய வீடியோ வெளியாகி இருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டிக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராகப் பணியாற்றி வந்தவர் தேவகோட்டையைச் சேர்ந்த முகமது மீராபஷீத். 23 வயது இளைஞரான முகமது மீராபஷீத், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊர் நோக்கிச் சென்றுள்ளார்.

முள்ளிக்குண்டு என்ற இடத்தில் சாலையோரம் விரவி இருந்த மணலில் டயர் சறுக்கி கீழே விழுந்த முகமது மீராபஷீத் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில், கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றித் திரிந்த குரங்களுக்கு காவலர் முகமது மீராபஷீத் பிஸ்கட் மற்றும் தேநீர் கொடுக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments