முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய மேலும் 16 இடங்களில் ரெய்டு... வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிகணினிகள் கைப்பற்றப்பட்டன

0 1797
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய மேலும் 16 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய மேலும் 16 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள தங்கமணியின் ஆடிட்டர் செந்தில்குமாரின் அலுவலகம், கோழிப்பண்ணை உரிமையாளர் மோகன் என்பவரது வீடு, எருமப்பட்டியில் சரண்யா ஸ்பின்னிங் மில், அதன் உரிமையாளர் அசோக் குமார் வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது.

மேலும், கொல்லிமலையில் பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்துக்கு சொந்தமான 2 இடங்கள், மோகனூர் சாலையில் தீபன் சக்ரவர்த்தி என்பவர் வீடு என நாமக்கல் மாவட்டத்தில் 12 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதுதவிர சேலத்தில் ஒரு இடத்திலும், ஈரோட்டில் 3 இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

கடந்த 15ஆம் தேதி நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் சோதனை நடத்திய அதிகாரிகள், வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிகணினிகள், ஹார்டு டிஸ்குகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments