ஒமைக்ரான் அச்சுறுத்தல் : மருத்துவக் கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திட வேண்டும் - ஆட்சியர்களுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

0 1994

மைக்ரான் அச்சுறுத்தல் உள்ள நிலையில் தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளை தயார் நிலையில் வைத்திடவும் நோய்த் தொற்றை கட்டுபடுத்தும் நடவடிக்கைகளை பின்பற்றவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ஆக்சிஜன் மற்றும் ஐசியு படுக்கைகள், வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன் கையிருப்பு போன்றவற்றை கண்காணிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. 

கொரோனா சிகிச்சை மையங்களை மீண்டும் நிறுவ தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருத்தமளிக்கும் வகையில் பொது இடங்களில் பலர் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுவதில்லை என்றும், நெரிசல் மிகுந்த இடங்களில் கட்டுப்பாடுகளை பின்பற்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments