திருப்பூர் பனியன் கம்பெனியில், வேலை செய்து வந்த வட மாநில தொழிலாளர்களை கடத்திய 13 பேர் கொண்ட கும்பல் கைது

திருப்பூரில் ஒடிசா மாநில தொழிலாளர்கள் 3 பேரை கடத்தி சென்று பணம் பறிக்க முயன்ற 13 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசாவை சேர்ந்த பிரதிஷ்குமார் மல்லி, புதேஷ் பனிகிராய், கன்ஜன் முன்னா ஆகியோர் சின்னக்கரையில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.
கடந்த 15-ஆம் தேதி மூவரும் வேலைக்கு சென்று விட்டு, இரவு வீடு திரும்பி கொண்டிருந்தபோது காரில் வந்த சிலர் அவர்களை வழிமறித்து கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
பிறகு கடத்தப்பட்டவர்களின் குடும்பத்தாரை தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள் தலா 1 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் 3 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில், கடத்தல் கும்பல் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை கொண்டு கோவை- கேரள மாநில எல்லையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூவரை மீட்டதுடன் கடத்தல் கும்பலையும் கைது செய்தனர்.
Comments