மாநிலங்களவையை சுமூகமாக நடத்துவது குறித்துப் பேச 5 கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்தது எதிர்க்கட்சிகளைப் பிரித்தாளும் சூழ்ச்சி - மல்லிகார்ஜுன கார்கே காட்டம்

0 1974
மாநிலங்களவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாகப் பேச்சு நடத்த 5 கட்சிகளை மட்டுமே அழைத்தது அரசின் பிரித்தாழும் சூழ்ச்சியைக் காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாகப் பேச்சு நடத்த 5 கட்சிகளை மட்டுமே அழைத்தது அரசின் பிரித்தாழும் சூழ்ச்சியைக் காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ததைத் திரும்பப் பெறக்கோரி 15 கட்சிகள் ஒன்றிணைந்து போராடி வரும் நிலையில், 5 கட்சிகளின் உறுப்பினர்களை மட்டும் பேச்சு நடத்த அழைத்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தப் பிரித்தாளும் போக்கைக் கைவிட்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments