இந்த ஆண்டில் ரூ.83,000 கோடிக்கு அதிகமாக வருமான வரி செலுத்த உள்ளதாக எலான் மஸ்க் தகவல்..

0 2139
அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், இந்த ஆண்டில் 11 பில்லியன் டாலருக்கு மேல் வருமான வரி செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், இந்த ஆண்டில் 11 பில்லியன் டாலருக்கு மேல் வருமான வரி செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய ரூபாய் மதிப்பில் 83 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் அவர் வருமான வரி செலுத்த உள்ள நிலையில், IRS என அழைக்கப்படும் அமெரிக்காவின் உள்நாட்டு வருமான சேவை துறை, பெறவிருக்கும் மிக பெரிய தொகை இது எனக் கூறப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2 ஆயிரத்து 300 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ள நிலையில், 151 பில்லியன் டாலர், அதாவது சுமார் 11 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகின் 2-ஆவது பெரிய பணக்காரராக எலான் மஸ்க் உள்ளார்.

சுமார் 13 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன்  உலகின் முதல் பணக்காரராக அமேசான் நிறுவனத் தலைவர் ஜெப் பெஸாஸ் உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments