கொரோனா தொற்று உறுதியானோர் மாதிரி, ஒமைக்ரான் தொற்றை கண்டறியும் மரபியல் சோதனைக்கு அனுப்பப்படும் - டெல்லி முதலமைச்சர்

0 2569

டெல்லியில் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படும் அனைவரின் மாதிரிகளும் ஒமைக்ரான் தொற்றை கண்டறியும் மரபியல் பகுப்பாய்வு சோதனைக்கு அனுப்பப்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அது என்ன வகையான வைரஸ் என முழுமையாக கண்டறியப்படவில்லை என குறிப்பிட்டார்.

ஒமைக்ரான் பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர், 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு விரைவில் பூஸ்டர் டோஸ் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments