இராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க மேலும் 3 தனிப்படைகள் அமைத்த காவல்துறை

0 2549

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய ஏற்கனவே 6 தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி, 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில், ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் உள்ளிட்ட 4 பேர் மீது, விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரை கைது செய்ய, மொத்தம் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜேந்திர பாலாஜி பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், ஒரு தனிப்படை பெங்களூருவில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மதுரை, சென்னையில் இரு தனிப்படை முகாமிட்டுள்ள நிலையில், கேரளா, கொடைக்கானல், கோவை ஆகிய பகுதிகளுக்கு  3 தனிப்படையினர் விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments