ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையம் வழக்கில் மேல்முறையீடு இல்லை - தமிழக அரசு

0 3188

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் இரு வெவ்வேறு அமர்வுகளின் உத்தரவுகளை ஏற்றுக்கொண்டதால் மேல்முறையீடு செய்யவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக மாற்ற 2019ஆம் ஆண்டில் அரசு பூர்வாங்க அறிவிப்பை வெளியிட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபா, தீபக் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதன் விசாரணையின்போது, போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், தீர்ப்பை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்படி சாவி ஒப்படைக்கப்பட்டதால் பிரச்சனை முடிவுக்கு வந்ததாகவும், ஏற்கனவே வழக்குகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பிரச்சனை தொடர்பாக அதிமுக வழக்கு தொடர முடியாது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments