கிறிஸ்துமஸ் விழாவில் ஓபிஎஸ் கருத்தால் பரபரப்பு.. ஜெயக்குமார் விளக்கம்

0 6686
அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருவிழாவில், ஒபிஎஸ் கூறிய குட்டிக்கதை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் சசிகலாவை குறிப்பிட்டு பேசவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருவிழாவில், ஒபிஎஸ் கூறிய குட்டிக்கதை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் சசிகலாவை குறிப்பிட்டு பேசவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். 

சென்னை சேத்துப்பட்டு காப்பகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருவிழாவில், எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இவ்விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக சாதி மதமற்ற கட்சி என்றும், ஏழைகளுக்காக உதவும் கட்சி என்றும் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் கல்வி மற்றும் மருத்துவ துறையில் கிறிஸ்தவர்களின் பங்களிப்பை அவர் பாராட்டி பேசினார்.

இதையடுத்து பேசிய ஓ.பன்னீர்செல்வம் தனது பேச்சின்போது, தந்தையிடம் திரும்பி வந்த ஊதாரி மகன் தொடர்பான குட்டிக்கதை ஒன்றை கூறி, தவறு செய்து மனம் திரும்பி வந்தவரை மன்னித்து ஏற்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்ற பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவிற்கு மன்னிப்பே கிடையாது என்றும், சசிகலா இணைப்பு அர்த்தத்தில் ஓபிஎஸ் குட்டிக் கதை கூறவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments