மருத்துவம் என்பது வேலை அல்ல, சேவை என்பதை மாணவர்கள் உணர வேண்டும் - முதலமைச்சர்

0 1987

சென்னையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் என்பது வேலை அல்ல, சேவை என்பதை மாணவர்கள் உணர வேண்டும் எனவும், மருத்துவ மாணவர்கள் கிராமப்புறங்களில் சேவையாற்ற முன்வர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். 

சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 34ஆவது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே முன்மாதிரியாக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது என்றார். மருத்துவம் என்பது வேலை அல்ல, சேவை என்பதை மருத்துவம் பயிலும் ஒவ்வொரு மாணவரும் உணர வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட முதலமைச்சர், ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என வித்தியாசம் இல்லாமல் சேவையாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

வீடுகளுக்கேச் சென்று மருந்து, மாத்திரை கொடுக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் முலம் இதுவரை 44 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளதாகவும், தமிழகத்தில் 8 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

நகர்ப்புறங்களில் இருந்து வந்திருந்தாலும் கிராமப்புறத்தில் மருத்துவ சேவையாற்ற முன்வரவேண்டும் எனவும் முதலமைச்சர் வலியுறுத்தினார். அத்தோடு, கடும் அழுத்தம் நிறைந்ததாக மருத்துவர்களின் வாழ்வு இருந்தாலும், அவர்கள் தங்களின் உடல்நலன், மனநலனை கவனித்து பராமரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments