கடலூரில் கார் மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில் வயதான தம்பதி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி.!

0 2180

கடலூர் அருகே கார், மரத்தில் மோதிய விபத்தில் காரில் இருந்த வயதான தம்பதி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருத்துறைப் பூண்டியை சேர்ந்த 65 வயது ராமு மற்றும் அவரது மனைவி 58 வயது லலிதா ஆகியோர் டொயோட்டா இட்டியோஸ் காரில் ஓட்டுனர் கோதண்டத்துடன் சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்தனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட தம்பதி சென்னையில் உள்ள மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடலூர் சிப்காட் பகுதியை கடக்கும்போது சாலையின் இடதுபுறமாக சென்ற கார் நிலைத்தடுமாறி, வலதுபுறத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

தூக்கக்கலக்கதில் இருந்த ஓட்டுனரால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments