விழுப்புரத்தில் சாலையின் நடுவே உலாவித்திரிந்த 2 மாடுகளால் நிலை தடுமாறி அரசு பேருந்து மரத்தின் மீது மோதி விபத்து.!

0 2615

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சாலையின் நடுவே உலாவித்திரிந்த 2 மாடுகளால் அரசு பேருந்து ஒன்று மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரத்துக்கும், பள்ளியந்தூரில் இருந்து விழுப்புரத்திற்கும் இரண்டு அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தன. காணை பகுதியில் சாலையின் நடுவே திடீரென 2 மாடுகள் வந்ததால், திருக்கோவிலூரில் இருந்து விழுப்புரத்துக்கு சென்று கொண்டிருந்த பேருந்தை அதன் ஓட்டுநர் நிறுத்தியுள்ளார்.

ஆனால் அந்த பேருந்தை முந்தி செல்ல முயன்ற பள்ளியந்தூரில் இருந்து விழுப்புரத்திற்கு சென்றுக்கொண்டிருந்த மற்றொரு அரசு பேருந்து எதிரே இருந்த புளிய மரத்தில் மோதியது.

இதில் பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்த நிலையில், பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர், மற்றும் 10க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments