நெல்லையில் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான சம்பவம்.. தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்.!

0 2445
நெல்லையில் சாப்ட்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நெல்லையில் சாப்ட்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியான விவகாரத்தில், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கடந்த 17-ந் தேதி நிகழ்ந்த இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த கோட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்பு குழு முன்பு பள்ளியை நிர்வகித்து வரும் டையோசிசன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக மேலாளர் புஷ்பராஜ் ஆஜராகினார்.

ஒரு மணி நேர விசாரணைக்குப் பின் ஆவணங்கள் போதுமானதாக இல்லை, மீண்டும் உரிய ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.

இதனிடையே, விபத்து நிகழ்ந்த சாப்ட்டர் பள்ளியின் தலைமையாசிரியர் பெர்சீஸ் ஞானசெல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேசுராஜ், அருள் டைட்டஸ், சுதாகர் டேவிட் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments