தமிழகத்தில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பில்லை - வானிலை ஆய்வு மையம் 

0 5289

தமிழகத்தில் வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் தெளிவாகவும் காணப்படும்.

கடலோர மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும். மேலும், உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இரு நாட்களுக்கு லேசான பனிமூட்டம் நிலவும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.

சென்னையில் காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 45கிலோ மீட்டர் வேகம் வரையில் காற்று வீசக்கூடும் என்பதால் அங்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் சென்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments