சென்னை மாங்காட்டில் 11 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவன் கைது

0 3078
சென்னை அடுத்த மாங்காட்டில் தாயின் கருவறையும், கல்லறையுமே பாதுகாப்பான இடம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடுத்த மாங்காட்டில் தாயின் கருவறையும், கல்லறையுமே பாதுகாப்பான இடம் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். 

சென்னை அடுத்த மாங்காட்டில் கடந்த 18-ந் தேதி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் எழுதி வைத்த மூன்று கடிதங்கள் போலீசார் கையில் சிக்கின. அதன் அடிப்படையிலும், மாணவியின் செல்போனுக்கு யாரெல்லாம் அதிக முறை தொடர்பு கொண்டனர் என்ற அடிப்படையிலும் விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிவில் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவனான விக்கி என்கிற விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.

தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வந்த விக்னேஷ், டைப்ரைட்டிங் வகுப்பு செல்லும் போது பழக்கம் ஏற்பட்டு மாணவியை காதலித்து வந்ததாகவும், பின்னாளில் விக்னேஷுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்ததாகவும், மாணவிக்கு விக்னேஷ் ஆபாச படங்கள், குறுஞ்செய்திகளை அனுப்புவதை வாடிக்கையாக வைத்திருந்ததாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் கல்லூரி மாணவன் விக்னேஷ் மீது பெண் வன்கொடுமை, போக்சோ, தற்கொலைக்கு தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்த போலீசார், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு வேறு யாராவது பாலியல் தொல்லை கொடுத்தார்களா? என்ற கோணத்தில் அந்த மாணவியின் செல்போனை மேலும் தீவிரமாக போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

மாணவியின் கடிதத்தில் உறவினர்கள், ஆசிரியர்கள் யாரையும் நம்ப வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்ததால், பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments