தமிழக மீனவர்கள் 55 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினரை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்.!

0 1178

தமிழக மீனவர்கள் 55 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினரை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்ற மீனவர்கள்  தனுஷ்கோடிக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த  இலங்கை கடற்படையினர், அத்துமீறி இலங்கைக் கடற்பகுதிக்குள் நுழைந்ததாக 55 மீனவர்களை கைது செய்தனர்.

அவர்களை 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க யாழ்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் மீனவர்களை விடுவிக்க கோரி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், 800-க்கும் மேற்பட்ட விசைப்படுகளை கடற்கரையில் நிறுத்தியுள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments