ஜம்முவில் மின்துறைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்.. மின்வழங்கல் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவத்தின் பொறியாளர் பிரிவு

0 1705

ஜம்முவில் மின்துறைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ள நிலையில், மின்வழங்கல் பராமரிப்புப் பணிகளில் ராணுவத்தின் பொறியாளர் பிரிவு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

ஊதியம் வழங்குவதில் தாமதம், மின்துறைச் சொத்துக்களைத் தனியார்மயமாக்கும் முடிவு ஆகியவற்றைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் மின்வாரியத்தின் பொறியாளர்கள் முதல் பணியாளர்கள் வரை இருபதாயிரத்துக்கு மேற்பட்டோர் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மூன்றில் ஒருபங்கு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து மின்னுற்பத்தி நிலையங்கள், துணைமின் நிலையங்கள் ஆகியவற்றில் மின்னுற்பத்தி, வழங்கல், பராமரிப்புப் பணிகளில் ராணுவத்தின் பொறியாளர் பிரிவு ஈடுபட்டுள்ளது. 

 

 

 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments