400 கோடி ரூபாய் மதிப்புள்ள 77 கிலோ ஹெராயினுடன் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் படகு

0 1515

பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 400 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை, குஜராத் தீவிரவாத தடுப்பு படையினருடன் இணைந்து, இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது.

"அல் ஹைசனி" என்ற பாகிஸ்தான் மீன்பிடி படகு சுமார் 77 கிலோ ஹெராயினுடன் குஜராத் அருகே இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த நிலையில், அதில் வந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இத்தகவலை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, குஜராத் கடல் பகுதி வழியே பாகிஸ்தானில் இருந்து போதைப்பொருள் கடத்தி வருவது அதிகரித்து வரும் நிலையில், தற்போது பெருமளவு பிடிபட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments