ரூ.100 கோடியில் "நமக்கு நாமே" திட்டம் - அரசாணை வெளியீடு

0 1838

தமிழகம் முழுவதும் ஊரகப்பகுதி வளர்ச்சிக்காக மக்கள் பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த 100கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஊரகப்பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் 10ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது.

இந்த திட்டத்தில், அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மேம்படுத்தப்படும் எனவும், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான கட்டடங்களும் கட்டப்படும் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.

அத்தோடு, பாலங்கள் கட்டுதல், சாலைகளை தரம் உயர்த்துதல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை திட்டங்களையும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மேற்கொள்ளலாம்.

இந்த திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments