சிவசேனா பஞ்சரான மூன்று சக்கர ரிக்சா வாகனம் ; மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சனம்

0 4681
சிவசேனா பஞ்சரான மூன்று சக்கர ரிக்சா வாகனம்

சிவசேனா ஒரு பஞ்சரான மூன்று சக்கர ரிச்சா வாகனம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்துள்ளார்.

மூன்று சக்கரங்களும் மூன்று திசையில் ஓடுவதாக அவர் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் என்சிபி ஆகிய கட்சிகளின் கூட்டணியை விமர்சித்தார்.

2019 ஆம் ஆண்டில் பாஜக மகாராஷ்ட்ராவில் ஆட்சியைக் கைப்பற்ற இருந்த நிலையில் இந்துத்துவா கொள்கையை சமரசம் செய்து சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து பதவியை குறிவைத்து சிவசேனா செயல்பட்டது என்று அமித் ஷா சாடினார்.

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடிய அமித் ஷா, சிவசேனா அரசு வசூல் வேட்டையில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments