பிலிப்பைன்சை தாக்கிய ராய் புயல் மற்றும் வெள்ள சேதங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்வு.!

0 1537

பிலிப்பைன்சை தாக்கி அதிபயங்கர ராய் புயல் மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள சேதங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 208 ஐ தாண்டியது.

அதிபயங்கர சூறைக்காற்றுடன் கொட்டிய கனமழையால் கட்டடங்கள் சீட்டுக் கட்டுபோல் சரிந்து விழுந்ததே அதிக உயிர் இழப்புகளுக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்பு பணியில் ராணுவம், கடற்படை, தன்னார்வலர்கள் களமிறக்கப்பட்டு அதிக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கியர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்வாசிகளாக மாறிய நிலையில் 239 காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் 52 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகல் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments