சேலத்தில் ஆண் குழந்தையை சாலையோரம் எரித்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.!
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில், குறைப்பிரசவத்தில் பிறந்த ஆண்குழந்தையை சாலையோரம் கிடத்தி எரித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காளியம்மன் கோவில் தெரு பகுதியில், நேற்றிரவு ஆண்குழந்தை சாலையோரம் போட்டு எரிக்கப்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள், காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்த போலீசார், கொலையாளிகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Comments