எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம்- தமிழக அரசு வெளியீடு

0 1198

தமிழக அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 6 ஆயிரத்து 958 எம்.பி.பி.எஸ்., இடங்கள் மற்றும் பி.டி.எஸ்.,படிப்புக்கான ஆயிரத்து 925 இடங்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 883 இடங்களுக்கான இணைய தள விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

இணைய வழியில் விண்ணப்பிக்க 2022 ஜனவரி 7 ஆம் தேதி கடைசி நாள் என்றும், நேரில் விண்ணப்பிக்க ஜனவரி 10 ஆம் தேதி கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு www.tnmedicalselection.net என்ற இணையத்தை பார்க்கலாம். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மாணவர் சேர்க்கை நிரப்பப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments