நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு.!

0 1249

நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்தவும் அதனை எதிர்க்கட்சிகள் முடக்காமல் இருக்கவும் எதிர்க்கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா மற்றம் இடதுசாரிகள் ஆகிய நான்கு அல்லது ஐந்து கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டதால் அரசின் அழைப்பை நிராகரிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

குளிர்காலக் கூட்டத் தொடரில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதையடுத்து நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநிலங்களவையின் மாண்பையும் மதிக்காமல் காவலர்களிடமும் பெண் காவலர்களிடமும் அநாகரீகமாக நடந்துக் கொண்ட எம்பிக்கள் தங்கள் செயலுக்கு வருந்தவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே இன்று காலை 10 மணியளவில் அனைத்து எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்களை ஆலோசனை நடத்த வருமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments