ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைப்பது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களுக்கான சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல்.!

0 1857

ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைப்பது உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்களுக்கான சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. 

தேர்தல் சட்ட சீர்திருத்தம் 2021 என்ற பெயரில் தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை அனுப்பி வைத்துள்ளது.

ஒரே வாக்காளர் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு தொகுதிகளில் கள்ள ஓட்டு போடுவதைத் தவிர்க்க, ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைக்க அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை ஆதாரம் அளிக்க முடியாத வாக்காளர்கள் இதர அடையாள அட்டைகளைக் காட்டியும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 1 2022 க்கு முன்பு 18 வயதை எட்டிய யாரும் வாக்களிக்க தகுதி உள்ளவர் ஆவார் என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்தல் ஆணையம் கோரிய சீர்திருத்தங்கள் ஏற்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று எட்டு மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் தேர்தல் சீர்திருத்த சட்டமசோதாவும் தாக்கலாகிறது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments