பிரிட்டனில் ஒரே நாளில் சுமார் 12,000 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ; மொத்த பாதிப்பு எண்ணிக்கை 37,000-ஐ தாண்டியது

0 2742
பிரிட்டனில் ஒரே நாளில் சுமார் 12,000 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

பிரிட்டனில் ஒரே நாளில் சுமார் 12 ஆயிரம் பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் புதிய வகை வைரசின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 37,000-ஐ தாண்டியுள்ளது.

பிரிட்டனில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது மூலம் அங்கு தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து, நோய்த்தடுப்பு நடவடிக்கையாக அந்நாட்டில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்க அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக தெரிவித்த அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித், ஒமைக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாகாவும், நிலைமைக்கேற்ப முடிவெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments