கடற்கரை பகுதிக்கு கொண்டுவரப்பட்ட ஆயிரம் கிலோ மிளகு, சுக்கு : இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டுவரப்பட்டதா.? போலீசார் விசாரணை

0 2332

இராமநாதபுரம் அருகே சந்தேகத்திற்கிடமாக கடற்கரைக்குக் கொண்டுவரப்பட்ட ஆயிரம் கிலோ மிளகு மற்றும் சுக்கை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேதாளை கடற்கரையில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவிருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் அங்கு பதுங்கி இருந்தனர்.  அப்போது அவ்வழியாக 50 கிலோ எடைகொண்ட 20 மூட்டைகளுடன் டாடா ஏஸ் வாகனம் ஒன்று வந்துள்ளது.

வாகனத்தை சுற்றி வளைத்து சோதனை செய்தபோது, அவற்றில் சுமார் ஆயிரம் கிலோ மிளகு மற்றும் சுக்கு இருப்பது தெரியவந்தது. தமிழகத்தில் கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் மிளகு இலங்கையில் 2000 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், பறிமுதல் செய்யப்பட்டுள்ள மிளகு, சுக்கு ஆகியவை இலங்கைக்குக் கடத்துவதற்காக எடுத்துவரப்பட்டதா என விசாரணை நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments