நாகப்பட்டினத்தில் மீனவர் வலையில் சிக்கிய 25 கிலோ கத்தாழை மீன் ரூ.2.30 லட்சத்துக்கு ஏலம்

0 5209

நாகப்பட்டினம் அருகே மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கத்தாழை மீன் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

விசைப்படகு மீனவரான ஜீவா என்பவரது வலையில் 25 கிலோ எடையிலான கத்தாழை மீன் ஒன்று சிக்கியது. மீனை ஏலம் எடுக்க வியாபாரிகள் ஆவலுடன் திரண்ட நிலையில் அந்த மீன் 2 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.

இதன் இறைச்சி கிலோ 500 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும், அதன் அடி வயிற்றில் உள்ள நெட்டி என்றழைக்கப்படும் காற்றுப்பை ஒயின் மற்றும் மருந்து தயாரிப்பில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுவதால் கத்தாழை மீன்கள் சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments