பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்

0 5214

பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகள் சொல்ல வந்ததை கேட்டு அவர்களின் மன வேதனையை கொட்டித்தீர்க்க அனுமதிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சூளியாபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்காக கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்த பின்னர் பேசிய அவர், மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை பெறுவார்கள் என்றார்.

மாணவிகள் தயவு செய்து தற்கொலை முடிவை கைவிடுமாறு கூறிய அமைச்சர்,  அரசின் 1098, 14477 உள்ளிட்ட எண்களை தொடர்பு கொண்டு கூட வேதனைகள், புகார்களை தெரிவிக்கலாம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments