வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் மீனவர்களை விடுவிக்க தொலைபேசியில் வலியுறுத்திய முதலமைச்சர்

0 2254

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அரசிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் தொலைபேசியில் பேசிய முதலமைச்சர், கைது செய்யப்பட்ட 55 மீனவர்கள் மற்றும் பிடிக்கப்பட்ட 8 படகுகளை விடுவிக்க இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதைத் தொடர்ந்து, மீனவர்கள் விடுதலை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதாக ஜெய்சங்கர் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதமும் எழுதி உள்ளார்.

முன்னதாக, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் மற்றும் மண்டபத்தில் இருந்து சென்ற 12 பேரை கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments