போலீசார் முன் சரணடைந்த கர்நாடக பெண் மாவோயிஸ்ட் ; மனம் திருந்தி வாழ விரும்புவதாக கூறி சரண்

0 3110
போலீசார் முன் சரணடைந்த கர்நாடக பெண் மாவோயிஸ்ட்

கர்நாடக அரசால் கடந்த 2006ஆம் ஆண்டு முதல் தேடப்பட்டு வந்த பெண் மாவோயிஸ்ட் ஒருவர், மனம் திருந்தி வாழ விரும்புவதாகக் கூறி, திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளரிடம் சரணடைந்துள்ளார்.

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தை சேர்ந்த சந்தியா என்ற அந்தப் பெண், அம்மாநில மாவோயிஸ்ட் இயக்கத்தின் மேற்குத் தொடர்ச்சி மலை சிறப்பு மண்டல குழுவிற்குட்பட்ட பகுதிகளில் பணியாற்றி வந்தவர்.

கடந்த 2 ஆண்டுகளாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சந்தியா, மாவோயிஸ்ட் அமைப்பிலிருந்து வெளியேறி சமுதாயத்துடன் இணைந்து அமைதியாக வாழ வேண்டி சரணடைந்துள்ளார் என்று வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ .ஜி. பாபு தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments