பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் எதிரொலி.! தரமற்ற உணவு தயாரிக்கப்பட்ட புகாரில் இருவர் கைது

0 3300

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே, பாக்ஸ்கான் தொழிற்சாலைக்கான தங்கும் விடுதியில் தரமற்ற உணவு தயாரித்ததாக எழுந்த புகாரில், சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

விடுதியில் கொடுத்த தரமற்ற உணவை சாப்பிட்டு 100-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆட்சியரின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட கேட்டரிங் நிறுவனமான சக்தி கிச்சன் கேட்டரிங் நிறுவனத்தைச் சேர்ந்த பிபின், கவியரசன் ஆகிய இருவரையும் வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக, பெண் தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments