தருமபுரியில் பழுதான 70 அரசுப் பள்ளிக் கட்டிடங்களை இடிக்கும் பணிகள் தீவிரம்

தருமபுரி மாவட்டம் அரூரில் பழுதான 70 அரசுப் பள்ளி கட்டிடங்களை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாநிலம் முழுவதும் உள்ள பழுதான அரசுப்பள்ளிக் கட்டிடங்களை கணக்கெடுத்து உடனடியாக இடிக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து, இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பழுதான கட்டிடங்களில் மாணவர்களை அமர வைக்க வேண்டாம் எனவும், சேதமடைந்த கட்டிடங்களை விடுமுறை நாட்களில் இடிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினி அறிவுறுத்தியுள்ளார்.
Comments