பாதுகாப்பு வேலி மீது ஏறி தப்பிக்க முயன்ற பாண்டா கரடி.. வைரலாகும் வீடியோ..!

0 3587
பாதுகாப்பு வேலி மீது ஏறி தப்பிக்க முயன்ற பாண்டா கரடி

சீனாவில் உள்ள விலங்குகள் பூங்காவில் உள்ள பாண்டா கரடி ஒன்று பாதுகாப்பு வேலி மீது ஏறி தப்பிக்க முயலும் வீடியோ வைரலாகி வருகிறது.

பீஜிங் விலங்குகள் பூங்காவில் வளர்க்கப்படும் 6 வயதான Meng Lan என்ற பாண்டா கரடி, விளையாடுவதற்காக கொடுக்கப்பட்ட பெரிய பந்து ஒன்றின் மீது ஏறி, அதிலிருந்து 2 மீட்டர் உயரமுள்ள பாதுகாப்பு வேலி மீது ஏறி வெளியேற முயற்சி செய்தது.

அதற்குள் அங்கு வந்த பூங்கா ஊழியர்கள் பாண்டாவுக்கு பிடித்த உணவு பொருட்களை காட்டி சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments