சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவம்.. சில மாதங்களுக்கு முன்புதான் கட்டிட உறுதிச் சான்றிதழ் பெற்றுள்ள பள்ளி

நெல்லையில் கழிவறை சுவர் இடிந்து விழுந்த பள்ளிக்கு சில மாதங்களுக்கு முன்புதான் உறுதி சான்று அளிக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 17ஆம் தேதி நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் விபத்து நிகழ்ந்த பள்ளிக்கு சில மாதங்களுக்கு முன்புதான் உறுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தீயணைப்பு துறை சார்பில் தடையில்லா சான்றும், 2019 ஆம் வருடம் வருவாய்த்துறை சார்பில் 3 ஆண்டு செல்லுபடியாகும் என்ற கட்டிட சான்றும் அளிக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Comments