மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் மேலும் பல பாலிவுட் பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்

0 4278
மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் மேலும் பல பாலிவுட் பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்

மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் மேலும் பல பாலிவுட் பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் ஏற்கனவே நடிகைகள் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் , நோரா ஃபதேஹி உள்ளிட்டோருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுகேஷ் சந்திரசேகரிடம் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் ஷ்ரத்தா கபூர், ஷில்பா ஷெட்டி, கார்த்திக் ஆர்யன் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை ஷ்ரத்தா கபூர் தொடர்பான ஒரு போதைபொருள் வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் அவருக்கு உதவியதாகவும், ஆபாச பட விவகாரத்தில் சிக்கிய நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்ராவுக்கு நிபந்தனை ஜாமீன் வாங்க சுகேஷ் சந்திரசேகர் உதவியதாகவும், நடிகர் கார்த்திக் ஆர்யனின் அடுத்த படமான 'கேப்டன் இந்தியாவை' தயாரிக்க சுகேஷ் சந்திரசேகர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments