ரூ. 2.5 இலட்சம் செலவிட்ட நிலையில் ஒரு இலட்ச ரூபாய்க்கு விற்பனை.. உரிய விலை கிடைக்காததால் வெள்ளைப் பூண்டுகளைச் தீவைத்து எரித்த விவசாயி

0 3266

மத்தியப் பிரதேசத்தில் வெள்ளைப் பூண்டுக்கு உரிய விலை கிடைக்காத கோபத்தில் விவசாயி சந்தையிலேயே அதைத் தீயிட்டு எரித்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

தியோலியைச் சேர்ந்த விவசாயி சங்கர் இரண்டரை இலட்ச ரூபாய் செலவிட்டு வெள்ளைப்பூண்டு பயிரிட்ட நிலையில், அவற்றை மூட்டைகளாகக் கட்டி மாண்ட்சரில் உள்ள சந்தையில் விற்றபோது ஒரு இலட்ச ரூபாய்க்கு விலை போனது.

இதனால் தனது கோபத்தை வெளிக்காட்டும் அடையாளமாக அவர் ஒரு மூட்டையில் உள்ள வெள்ளைப்பூண்டுகளைத் தரையில் போட்டுத் தீ வைத்து எரித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments