முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய அவருடன் தொடர்பில் இருந்த 600 பேரின் செல்போன் எண்கள் கண்காணிப்பு

0 4258

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய அவருடன் தொடர்பில் இருந்த 600 பேரின் செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, உயர்நீதிமன்றம் அவரது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததால் அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்த கட்சியினர், ஆதரவாளர்கள், உறவினர்களின் தொலைபேசி எண்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையே முன்ஜாமீன் கோரி உச்சநீதிதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி மேல்முறையீடு செய்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments