எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 43 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.!

0 1843

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 43 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் சிறை பிடித்ததோடு, அவர்களது 6 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தது.

மீனவர்கள் அனைவரையும் யாழ்பாணம் மயிலட்டி துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருவதாக கூறப்படும் நிலையில், மீனவர்கள் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் படகுகள் அனைத்தும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments