தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2234

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை எனவும், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த 5 நாட்களுக்கு 23-ந் தேதி வரையில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என கூறப்பட்டுள்ளது. இருப்பினும், வரும் நாட்களில் குளிர் அதிகரிக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

உள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இரு நாட்களுக்கு லேசான பனிமூட்டம் நிலவும் எனவும், குறைந்தப்பட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், குமரிக்கடலுக்கு செல்லும் மீனவர்கள் இரு நாட்களுக்கு எச்சரிக்கையுடன் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்தமானுக்கு தெற்கே பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென் கிழக்கு வங்கக் கடலில் மணிக்கு 50கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசும் என்பதால் இரு நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments