ஜவுளி ஏற்றுமதியை ரூ.25 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு - அமைச்சர் செந்தில்பாலாஜி

ஜவுளி நகரமான கரூரில் 10 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி நடைபெற்று வருவதாகவும், 2030ம் ஆண்டிற்குள் அதை 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்ததோடு, தேர்வாகியவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். விழாவில் பேசிய அவர் கரூரில் ஐடி பார்க் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Comments