அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் - அ.தி.மு.க.வினர் 950 பேர் மீது வழக்குப்பதிவு

0 2321

தூத்துக்குடியில் அனுமதியின்றி ஆர்பாட்டம் நடத்தியதாக அதிமுகவினர் 950 பேர் மீது தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விலைவாசியைக் கட்டுப்படுத்தக் கோரியும், தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும் நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, எம்.எல்.ஏ எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்ட அ.திமு.க.வினர் 950 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments