சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி தேரோட்டம்... தேரை வடம் பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்

0 2964

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆருத்ரா தரிசன உற்சவம் தொடங்கிய நிலையில், 9-ம் நாளான இன்று தேர்த்திருவிழா நடைபெற்றது. மூலவர்களான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவர்கள் சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனி தனி தேர்களில் எழுந்தருளினர். பின்னர் கீழவீதி தேரடி நிலையிலிருந்து தேர்கள் புறப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்களை வடம் பிடித்து இழுத்தனர்.

நாளை திங்கள்கிழமை அதிகாலை மகாபிஷேகமும், பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments