திருவள்ளூரில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியாரை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்த போலீசார்.!

0 2425

திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில், இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சாமியாரை போக்சோ சட்டத்தில் கீழ் போலீசார் கைது செய்தனர்.

விநாயகபுரம் பகுதியில் ஷீரடிபுரம் சர்வசக்தி தியான பீடத்தை, சங்கரநாராயணன் மற்றும் அவனது மனைவி புஷ்பா இருவரும் நடத்தி வந்தனர். இந்நிலையில், கொளத்தூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தாயாருக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறி ஆசிரமத்தில் விபூதி வாங்க வந்த போது, பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்தை கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அப்பெண்ணை மறுபடியும் வலுக்கட்டாயமாக அழைத்ததாகவும், வரவில்லை என்றால், அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி மிரட்டியதாகவும், அப்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments