பாகிஸ்தானில் வங்கியில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு.!

0 2095

பாகிஸ்தானில் வங்கியில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சி ஷேர்ஷா பகுதியில் உள்ள வங்கியில் சிலிண்டரில் இருந்து எரிவாயு கசிந்து பயங்கர விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. கட்டத்தின் 2 மாடிகள் உருக்குலைந்து போனதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஐ கடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments